என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையல் கூடம்"
- பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது.
- விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது.
அதையடுத்து நடைபெற்ற திகுக்கார்த்திகை விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியர்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், தேய்பிறை அஷ்டமி மற்றும் கார்த்தகை வழிபாட்டு குழு நிர்வாகிகள் ராம சேதுபதி, பி.பாஸ்கர்,எம்.குமரன், மணிகண்டன், முருகேசன், சதீஸ்குமார், எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது.
- பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார்.
புதுச்சேரி:
காரைக்காலில் மாணவர் களுக்கான மத்திய சமையல் கூடத்தை, மிகவும் தூய்மையாக பராமரிக்கவேண்டும். என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் அரசு மேல் நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி துணை முதல்வர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒதுக்கிவிட்டு, துணிப்பையை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், மாணவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பை களை கலெக்டர் வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரி யரும் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான விசுவேஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.
மேலும் பள்ளி அருகில் உள்ள, மாணவர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு சமைக்கும் இடங்களை பார்வை யிட்ட கலெக்டர், அங்குள்ள அரிசி, மளிகை, காய்கறி பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், மாண வர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, தூய்மையாக பரா மரிக்கவேண்டும். தினசரி சரியான நேரத்தில், சரியான எடையுடன் காய்கறிகள், மளிகை பொருட்கள் வருகிறதா என்பதை சரிபார்க்கவேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான உணவை, சத்தாக சமைத்து வழங்கவேண்டும். மேலும் சமைத்த உணவுகளை வண்டி யில் ஏற்றி பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் போது, சுத்த மாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
- புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.
பூதலூர்:
தமிழ்நாட்டில் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்கள், சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் பல்வேறு பள்ளி களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த தொடக்கப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
பள்ளிக்கு மிக அருகில் பிரதான சாலை அமைந்துள்ளதால் எந்த நேரமும் பயணிகள் பஸ்கள, இரண்டு சக்கர வாகனங்கள், அதிகளவில் சென்று கொண்டிருக்கும் இதனால் சுற்றுச்சுவரை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி நூல் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு கொடுத்தனர்.அப்போது அவர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டது விரைவில் கட்டப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின ரிடம்உறுதியளித்தார்.
இரண்டு மாதங்கள் ஆன பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இதுவரை சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கான சமையல் கூடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.புதிதாக சமையல் கூடம் எதுவும் கட்டுவ தற்கான பணிகள் துவங்கப்படவில்லை. நாளை பள்ளிகள் திறக்கப்படும் போது சத்துணவு திறந்தவெளியில் சமைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது பெற்றோர்கள் மனதில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்பாதுகாப்பாக வந்து செல்வதற்கும், மாற்று ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பான முறையில் சத்துணவு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் ஒரு தலைமையாசிரியர் முயற்சியால் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு தலைமை ஆசிரியர் மாலா அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடத்தை அழகுப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கினார். இதையடுத்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.
இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.
தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக்கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும், மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்குதல், டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த மாநகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராகவே திகழ்ந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்